Sunday, February 5, 2012

'மெரினா' -விமர்சனம்; குடிக்க முடியாத ரொம்ப பழைய டொரினா



இனிமேல் படம் பார்க்கப்போகும்போது, குறிப்பிட்ட இயக்குனரின் முந்தைய படங்களை ஒரு மதிப்பீடாகக்கொண்டுபோய் யாரும் ஏமாற வேண்டாம் என்று சமீபகாலமாய் சில இயக்குனர்கள் நம்மை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் அவற்றை மறந்துவிட்டு அடிக்கடி வாங்கிக் கட்டிக்கொள்கிறோம்
'ராஜபாட்டை' தந்த சுசீந்திரனைத்தொடர்ந்து இப்போது அப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்த்தியிருப்பவர்பசங்கபாண்டிராஜ்.
'காதல்ங்கிறது ஒரு காக்கா பீ மாதிரி அது எப்ப எவன் தலையில விழும்னு சொல்லவே முடியாதுஎன்று அதற்கு தன்னிலை விளக்கமாக படத்தில்  இப்படி  ஒரு வசனத்தையும் வைத்திருக்கிறார்.
தலையை மெதுவாகக்கழுவிக்கொள்ளலாம். முதல்ல கதையைப்பாப்போம்.

மெரினா பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், ஒரு குதிரை ஓட்டி, பீச்சை வாடகைக்கு விட்டிருப்பவர், சில காதல் ஜோடிகள், மருமகளால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு வந்து பிச்சை எடுப்பவர் என்று ஒரு மெகா சீரியலுக்கு தீனி போடும் அள்வுக்கு கேரக்டர்கள். இந்த சுண்டல் விற்கும் சிறுவர்களில் ஊரை விட்டு ஓடிவந்த ஒருவனை இரு போலீஸ்காரர்கள் தேடி மெரினாவில் அழைகிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரியின் மகன் தலையில் கல்லை அடித்துவிட்டு ஓடி வந்துவிட்டானாம். அதை ஒரு கொலைக்கேஸ் மாதிரி காட்டிவிட்டு கடைசியில் காக்கா பீயை விட மோசமாக முடிக்கிறார் போங்கு ராஜ். 
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும், ஓவியாவும் மெரினா பீச்சில் சந்திக்கும் காதலர்கள். வந்த பத்தாவது நிமிடமே ஏதாவது ஒரு காரணத்துக்கு சண்டை போட்டுவிட்டு பிரிந்து விடுகிறார்கள். 
அதுக்கும் அடுத்த பக்கம் திடீரென்று மெரீனாவில் ரெய்டு வரும் ஒரு கும்பல் குழந்தைகளை ஒரு பள்ளியில் அடைத்து வைத்து சின்ன வயசில் படிக்கவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அந்த அடுத்த பக்கத்துக்கும் அடுத்த பக்கத்தில் பிச்சைக்கார தாத்தா, பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு, தான் புல்லாங்குழல் விற்று சம்பாதித்த காசில், பீச் சிறுவர்களிடையே ஒரு குதிரை ரேஸ் நடத்தி கோப்பை வழங்கி மறுநாள் மண்டையைப் போடுகிறார். அவர் அனாதைப் பொணமாகிவிடாமல் போலீஸின் காலில் விழுந்து சொந்தத்தாத்தா மாதிரி அடக்கம் செய்கிறார்கள்.அத்தோடு ஃபிலிம் பை பாண்டிராஜ்என்று படம் முடிகிறது.

என்னங்க கதை சொல்றேன்னுட்டு எங்களைஅடக்கம்பண்ண ஐடியா பண்ற மாதிரி தெரியுதே என்று நீங்கள் முனுமுனுக்க ஆரம்பித்திருப்பது தெரிகிறது.ஆனால் மெரினா பக்கம் எட்டிப்பார்த்தால் தான் தெரியும்,கதை என்ற பெயரில் பாண்டே ராஜ் படுத்தியிருக்கும் அவஸ்தையை.

தியேட்டர்களுக்கு பொட்டி கிளம்பும்வரையிலுமே இந்தப்படத்தின் கதை என்ன என்பது பற்றி இயக்குனர் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகவே தெரியவில்லை.பீச்சில் சுண்டல் விற்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதா, சிவகார்திகேயன் -ஓவியாவின் காதல் பஞ்சாயத்தா,போலிஸ்காரனின் மகனை கல்லால் அடித்துவிட்டு ஓடிவந்தவனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதா,அல்லது முதியவர் ஒருவரின் முடிவுரைப்பக்கங்களா? இப்படி ஏகப்பட்ட கிளை, துணை கதைகள் இருக்கின்றன.

சிறுவர்களின் சேட்டைகள் சில இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும், அதுபசங்கஎன்றொரு படத்தைப்பார்த்து காப்பியடித்தது போலவே இருந்தது.என்னதான் நம்ம படம் தேசிய விருது வாங்கியிருந்தாலும், இதுக்குத்தான், எப்பப்பாத்தாலும் அதையே பாத்துக்கிட்டிருக்கக்கூடாது என்பது.

இசை அறிமுகம் கிரீஷ்.ஜி என்று போடுகிறார்கள். அவர் படம் முழுக்க பாட்டு, ரீரெகார்டிங் என்ற பெயரில் நம் தலையில் பல்வேறு வடிவங்களில் கல்லைத்தூக்கிப் போடுகிறார்.

ஒளிப்பதிவும் அறிமுகம்தான். பெயர் விஜய். சிறுவர்களின் இயல்பான நடிப்புக்கு அடுத்தபடியாக இவருடைய ஒளிப்பதிவு படத்தின் ஆறுதலான அம்சங்களுல் ஒன்று என்று சொல்லலாம்.

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்புகளில் சிங்கம் போல காட்சியளித்த சிவகார்த்திகேயன், சினிமாவில் தாயை விட்டுப்பிரிந்த குட்டிக்குரங்கு போல தவிக்கிறார்.கைவசம் மேலும் நாலு படங்கள் இருப்பதால், சாவகாசமாக பழகி அவர் ஒருதேர்ந்த நடிகராகும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.ஓவ்யா உங்களுக்கு இன்னொரு களவாணி நோவ்யா.

படத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் நிறைய இடங்களிலிருந்து சுடப்பட்ட வசனங்கள். பசங்க சுண்டல் விற்கிறார்களா அல்லது கிண்டல் விற்கிறார்களா என்று குழம்பும் அளவுக்கு நையாண்டி  வசனங்கள் படம் முழுக்க பரவிக்கிடக்கின்றன.’இந்த மூஞ்சியெல்லாம் லவ் பண்ணுது பாருடா....புது அக்கா, புது சொக்கா ,போங்கடா ங்கொக்காமக்கா,என்று சிறுவர்கள் சுண்டல் வாங்காதவர்களைப்பார்த்து கொளுத்திப்போட்டபடி போய்க்கொண்டேயிருக்கிறார்கள்.

படத்தில் பிச்சையெடுக்கும் பெரியவரைக்காட்டும்போதெல்லாம் அவர் டைம்ஸ் ஆஃப் இண்டியா படித்துக்கொண்டிருப்பதைக் காட்டியதால் பெரியவருக்கு ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக் இருக்கிறது போலிருக்கு என்ற ஒரு பீதி இருந்துகொண்டே இருந்தது.நல்லவேளை என்ன ஒரு காரணத்தாலோ அப்படி ஒன்று இடம் பெறவில்லை.

அடுத்தபடியாக க்ளைமேக்ஸ் காட்சியில் கூட்டத்தின் இடது ஓரத்தில் ஒரு பணக்கார கணவான் கையில் பெரிய கட்டுடன் நின்று கொண்டிருந்தார். இயக்குனர் பாண்டேராஜ் படம் தயாரிக்க உதவியதில் அவருக்கு ஏற்பட்ட காயமாகத்தான் அது இருக்கக்கூடும்.

மெரினாகுடிக்க முடியாத ரொம்ப பழைய டொரினா

No comments:

Post a Comment