Thursday, August 16, 2012

விமர்சனம் ‘நான்’ – நான் என்பது நான் இல்லையே தேவதேவி




கடந்த வாரம் மாக்ஸிம் இதழ் அட்டைக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்துவிட்டு, நான் அவளில்லை என்று போஸ் கொடுத்ததை விட கொஞ்சமும் கூச்சமின்றி பொய்சொல்லிக்கொண்டிருக்கும் ஷ்ரேயாவுக்கு, ஆண்ட்டிரியா எவ்வளவோ தேவலை.
 

படம் ‘அபூர்வராகங்கள். 

ஒரு கச்சேரி முடிந்து கமல் வெளியே வந்து டென்சனாக நிற்பார். காருக்குள் அமர்ந்து காதல்ஜோடி ஒன்று அனிருத்-ஆண்ட்ரியா பாணியில் சூடாக முத்தப்பரிமாற்றம் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

இப்போது ஆண்ட்ரியா விஷயம் கேட்டு, இது சிங்கிள் ஆட்டோன்னு நெனச்சோம் ஷேர் ஆட்டோவா இருக்கே’’ என்று நினைத்து  மூடு அவுட் ஆனமாதிரியே, அப்போதும் டென்சனாகி, கமல் கார் கதவைத் தட்ட அந்த காதல் ஜோடி, எந்தவித பதட்டமுமின்றி,’’வெளில ஒரே மழை. வாட் டு டூ?’’ என்பார்கள்.

அவ்வப்போது போனை சுவிட்ச் ஆஃப் பண்ணினாலும், மாட்டுகிற நபர்களிடம் ஆண்ட்ரியா நேர்மையாக சொல்லுகிற பதில் இதுதான். 

அப்ப அந்தப்பையனை அழுத்தமா கிஸ் பண்ணனும் போல இருந்தது. பண்ணினேன். அதுக்கு இப்ப வாட் டு டூ?? போய் அவங்கவங்க வேலையைப் பாப்பீங்களா?

ஷ்ரேயா, ஆண்ட்ரியாக்களின் இந்த பஞ்சாயத்தை பாலாவை படமாக எடுக்கச்சொல்லி இருந்தால் அவர் அந்தப்பட்த்திற்கு என்ன பெயர் வைத்திருப்பார்?

‘அவள் இவள்

. படத்தில் ஜி.எம்.குமாருக்குப் பதிலாக அம்மணக்குண்டியாக யாரை அலையவிட்டிருப்பார் என்பதை நான் சொல்லியா சகலகலாவல்லவர்களாகிய நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்?

சரி, வெட்டிக்கதைகள் எதற்கு? விஜய் ஆண்டனியின் ‘நான்பட விமர்சனம் பார்ப்போம்.
ரு இசையமைப்பாளராக பாடல்கள் வரைக்கும் ஓகே. ஆனால் பின்னணி இசை என்று வரும்போது விஜய் ஆண்டனி மேல் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இந்த அவரது 25 வது படத்தில்தான் பின்னணி இசை என்றால் என்ன என்று உணர்ந்து இசையமைத்திருக்கிறார். இதற்கு முன் பின்னணி இசை என்ற பெயரில் 24 பட இயக்குனர்களை விஜய் ஆண்டனி ஏமாற்றினார் என்று சொல்லக்கூட எனக்கு தயக்கமில்லை’’ -சில தினங்களுக்கு முன்பு நடந்தநான்பட பத்திரிகையாளர் சந்திப்பில் ஜீவா சங்கர் 

‘’ என் நெருங்கிய நண்பர் என்பதற்காகச் சொல்லவில்லை. ‘நான்இயக்குனர் ஜீவா சங்கர் தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்’’ -அதே நிகழ்ச்சியில்  நான்பட ஹீரோ விஜய் ஆண்டனி.

ஆடியோ, ட்ரெயிலர் வெளியீட்டு விழாக்களில் இப்படிப்பட்ட உள்குத்தல், சைடுகுத்தல், நேர்க்குத்தல் புகழாரங்கள் எதையுமே காதில் போட்டுக்கொள்வதில்லை. காரணம் மற்ற பார்ட்டிகளுக்கு சொம்படிப்பது என்ற ஒன்றைத்தவிர, உருப்படியான வேறு எதையும் அங்கே சந்திக்க முடிவதில்லை.
ஆனால் சில நேரங்களில் சிலர் மனிதர்கள்.

விஜய் ஆண்டனி, தயாரித்து, இசையமைத்து, முதன்முதலாக கதாநாயகனாக நடித்துள்ளநான்மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் ஜீவா சங்கர் இயக்குனராக அறிமுகமாகும் படம்.
தந்தைக்கு துரோகம் செய்யும் தாயை இளம் வயதில் பார்க்கநேரும் கார்த்திக் [வி.], தாயையும், அவரது கள்ளக்காதலனையும் வீட்டோடு கொளுத்திவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு போகிறார்.

அங்கிருந்து விடுதலையாகி, இருக்கிற ஒரே சொந்தமான சித்தி வீட்டுக்குப்போனால் ,’எங்கே தன்னையும் மண்ணெண்ணை ஊத்திக்கொளுத்திவிடுவானோ?’ என்ற பயத்தில் வீட்டில் சேர்க்காமல்  சித்தி விரட்ட, வேலை தேடி சென்னை புறப்படுகிறான்
 

அவன் செல்லும் பஸ் பெரும் விபத்தில் மாட்டிக்கொள்ள, அதில் இறந்த சலீம் என்ற முஸ்லீம் ஒருவரின் சர்டிபிகேட் போன்றவைகளை தனது பெயருக்கு ஃபோர்ஜரி பண்ணி மெடிக்கல் காலேஜில் சேருகிறான். அங்கே அவனது வாழ்வுதனை தொடர்ந்து சூது கவ்வ, சில கொலைகளை செய்யவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறான்.

இங்கே தப்பு எதுவும் தப்பே இல்லஎன்று க்ளைமாக்ஸில் ஒரு சிறு செண்டிமெண்ட் ட்விஸ்ட் வைத்து கதையை முடிக்கிறார் இயக்குனர்.

கார்த்திக் மற்றவர்கள் குரலில் மிமிக்ரி பேசுவான் என்ற, தமிழ்சினிமாவின் துருப்பிடித்துப்போன, ஒரு பழைய ஆயுதத்தை கையில் எடுத்த இண்டர்வெல்லுக்கு முந்திவரை, சற்றும் யோசிக்க இடமின்றி, மிகப் பரபரப்பான ஒரு திரைக்கதையில் கதையை நகர்த்தியிருந்த ஜீவா சங்கர், இடைவேளைக்குப் பிறகு ரொம்பவே தடுமாற ஆரம்பித்துவிட்டார்.

இரண்டு கொலைகளை செய்துவிட்டு காரில், இரவில், ஊருக்கு வெளியே ஜஸ்ட் லைக் தட் பிணங்களை புதைத்துவிட்டு வருவதும், போலீஸ் அதை ஏதோ ஒரு பழைய சைக்கிள் காணாமல் போனதை விசாரிப்பதுபோல், சோப்ளாங்கித்தனமாக விசாரிப்பதும், இடைவேளைக்கு அப்புறமான திரைக்கதையில் பெரும் சறுக்கல்கள்.

ஆனால், தொடர்ந்து சொதப்பல்களாக வந்துகொண்டிருக்கும் புது இயக்குனர்களுக்கு மத்தியில் ஜீவா சங்கர், ஒளிப்பதிவாளராக, இயக்குனராக ஒரு நல்ல வரவுதான் என்பதற்கு படத்தின் பல காட்சிகள் சாட்சிகளாகின்றன..

அதிலும், கல்லூரி ரவுடி ஒருவன் மிரட்டிக்கொண்டிருக்க, தன்னை ப்ளாக்மெயில் செய்யவந்த ஃபோர்ஜரி அப்பாவை, பாரில் பீர்பாட்டில் கொண்டு மண்டையை உடைத்துஇருவருக்கும் ஒரே பாட்டிலால் பதில் சொன்ன காட்சி தியேட்டரில் அப்ளாஸை அள்ளும், ஜன,ங்கள் வந்தால்

நடிகராக விஜய் ஆண்டனி, கதை முழுக்கவே அவர் நெர்வஸாக இருக்கவேண்டி இருந்ததால், ஒரிஜினல் நெர்வஸா அல்லது நெர்வஸ் மாதிரி நடித்தாரா என்று குழம்பவேண்டி இருக்கிறது

 இன்னொரு பக்கம் அவருக்கு லவ், டூயட் என்று எதுவும் வைக்காமல் இருந்ததிலும் டைரக்டரின் சாமர்த்தியம் பளிச்.

கார்த்திக்கின் நண்பர் சித்தார்த்துக்கும், அவரது காதலி ரூபாவுக்கும் இடையில் இருப்பது காதலா, பொசசிவ்னெஸா, அல்லது வேறு என்ன கருமாந்திரமோ இருவரும் அநியாயத்துக்கு தாங்களும் குழம்பி ஆடியன்சையும் குழப்புகிறார்கள்.

அனுயாவுக்கு அனுயாயத்துக்கு ரொம்ப குட்டிப்பாத்திரம். அடுத்த படத்துலயாவது கொஞ்சம் நல்ல கேரக்டரா தரச்சொல்லி டைரக்டரைப் பாத்து அழுயா.

மக்கயாலா மக்கயாயா வக்கப்போரை திங்கலையா பொக்கைவாயாஎன்ற வார்த்தைகள் புரியாத ஒரு பார் சாங்கையும் சேர்த்து 4 பாடல்களையும்,  சுமாருக்கும் கொஞ்சம் மேலே ஒப்பேத்தியிருக்கும் இசையமைப்பாளர்  விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் புல்லரிப்பு அடைந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் படத்தின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு பின்னணி இசையால் நியாயம் செய்திருக்கிறார்.

நான்டைரக்டர் பாஸ். இசைமைப்பாளர் விஜய் ஆண்டனி ஓகே. ஹீரோ விஜய் ஆண்டனி ஜஸ்ட் பாஸ்ஆனால் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி தப்பிப்பாரா? இந்தக் கேள்விக்கு அவர் பாட்டுதான் பதில்



டைலம்மோ டைலம்மோ டைலோ டைலோ டைலோம்மோ….


2 comments:

  1. நல்லாவே சொன்னீங்க! விமர்சனம் இல்லே அந்த ஆண்ரியா மேட்டர் பத்தி சொன்னேன்!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
  2. //மக்கயாலா மக்கயாயா வக்கப்போரை திங்கலையா பொக்கைவாயா// வாவ்..இந்தப்பாடல் வரிகளை கண்டுபிடித்தது நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். :)

    ReplyDelete