Wednesday, December 19, 2012

’ ‘கும்கி’ யில என்ன நடந்ததுன்னு சொல்லுங்கண்ணே சொல்லுங்க’






’கும்கி’ விமர்சனம் எழுதியபோது, டைட்டில் கார்டில், பதினெட்டு உதவி இயக்குனர்களின் பெயர் இடம்பெற்றது. இவ்வளவு பேர் எதற்கு என்று கேட்டால் சொல்கிறேன்’ என்று ஒரு குறிப்பு வைத்திருந்ததற்கு, ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ என்று விளக்கம் கேட்டு கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்பு கொண்டனர்.

இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு சில கடிதங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இன்கமிங் ஃப்ரீ என்பதால், நேரில் கேட்டவர்களையும், அனைத்து தொலைபேசிகளையும் அட்டெண்ட் பண்ணத்தவறவில்லை.

’ஏதோ ஒரு நல்ல எண்ணத்துல நிறைய அசிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கு வேலை குடுத்துருக்காரு பிரபு சாலமன். இதுலயுமாய்யா குறை கண்டுபிடிப்பாய்ங்க?’ என்ற அங்கலாய்ப்பு குரல்களும் எனக்குக் கேட்காமலில்லை. அந்த ‘வேலை குடுத்துருக்காங்களே’விலேதான் பிரச்சினையே  ஆரம்பமாகிறது.

படம் பார்க்காதவர்களுக்கும் தெரியும், ‘கும்கி’ படம்  முழுக்க முழுக்க மலைப்பிரதேசங்களில் படமாக்கப்பட்டதென்பது. அந்த மலைப்பிரதேசங்களுக்கு படப்பிடிப்பு உபகரணங்களைத் தூக்கிச்செல்ல, வழக்கமான கேமரா அசிஸ்டெண்டுகள் போதவில்லை. இவர்களை அதிகம் அழைத்துக்கொண்டால் பேட்டா, மற்ற சமாச்சாரங்கள் ஜாஸ்தி. லைட்மேன்கள் சமாச்சாரமும் மேற்படியே. 750 ரூபாய் பேட்டாவில் துவங்கி தலைக்கு ரூ 2000 வரை ஆகும். ஆனால் உதவி இயக்குனர்கள் எனப்படுபவர்களோ, இதில் பத்தில் ஒரு மடங்கை கொடுத்தால் கூட வாயைப் பொத்தி வேலை பார்க்கத் தயங்காதவர்கள். எனவே ஏழைப் பங்காளன் லிங்குசாமியைக் காப்பாற்றும் பொருட்டு, அல்ப பேட்டாக்களில், படம் முழுக்கவே சுமார் 26 உதவி இயக்குனர்களைப் பயன்படுத்தி, சில லட்சங்களை சிக்கனம் செய்த மகாபிரபு சாலமன், கடைசிவரை தாக்குப் பிடித்த 18 உதவி இயக்குனர்களின் பெயரை டைட்டில் கார்டில் போட்டாராம்.

கதைப்படி, மலைப்பிரதேச மக்களை டார்ச்சர் செய்த, கொம்பன் யானையை விரட்டக்கூட பிரபு சாலமன் பெரும் செலவுகளை இழுத்துவைக்கும், ஒரு கும்கி’ யானையைத் தேடிப் போயிருக்கவேண்டியதில்லை. அதற்கும் கூட, எந்த செலவும் வைக்காத ‘பலம்’ வாய்ந்த உதவி இயக்குனர்களைப் பயன்படுத்தியிருக்கலாமோ? 

இந்த ஐடியாவை அடுத்த படத்துக்கு பயன்படுத்தினா நமக்கு ராயல்டி அனுப்ப மறந்துராதீங்க பாஸ்.             

3 comments:

  1. அட ஆச்சர்யமா இருக்குதே! இப்படியெல்லாம் தயாரிப்பாளரை காப்பாத்துன டைரக்டர பாராட்டுவோம்!

    ReplyDelete
  2. தினமும் hello பக்கம் வருவேன் ஆனால் நீண்ட நாள் கழித்து இன்றுதான் oho பக்கம் வந்தேன், மேலும் இன்றுதான் உங்கள் பதிலை பார்த்தேன் நன்றிண்ணே...........

    ReplyDelete
  3. அடங்கொன்னியா.....

    ReplyDelete